உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) வரலாற்றில்
Published January 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது.
அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (14) 23,708.70 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 12 ஆம் திகதி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 23,659.70 அதிகூடிய புள்ளிகளாக பதிவாகியிருந்தது.
அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 100.90 புள்ளிகள் உயர்ந்து 23,708.70 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு ரூ. 9.26 பில்லியன் ஆக பதிவாகியுள்ளது.