இன்று முதல் குறைவடையும் மழை வீழ்ச்சி!
இன்று (15) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி குறையக்கூடும் என வளிமண்டலவியல்
Published January 15, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
இன்று (15) முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை வீழ்ச்சி குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.