நாடெங்கிலும் களை கட்டியுள்ள பொங்கல் தின நிகழ்வுகள்

மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம் பெற்றது.

Published January 15, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 7 min read

மன்னார்

மன்னாரில் பொங்கல் நிகழ்வுகள் அமைதியான முறையில் இடம் பெற்றது.

மக்கள் வீடுகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று (15) வியாழக்கிழமை காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்து மற்றும் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (15) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

காலை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலய முன்றிலில் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் வண்ணக்கமார்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பொங்கல் படைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பேரிடர்களிலிந்து மக்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களுக்கு நல்லாசிவேண்டியும் விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறவேண்டியும் மாமாங்கேஸ்வரருக்கு பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

இன்றைய தைத்திருநாள் விசேட பொங்கல் பூஜையில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் பொங்கல் வாழ்த்துகளையும் தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோன்று இன்று அதிகாலை முதல் வீடுகளிலும் பொங்கல் படைக்கப்பட்டு சூரியனுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

திருகோணமலை

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமான இன்று (15) திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளிலும் விசேட பொங்கல் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றன.

குறிப்பாக ஆலயங்களிலும், வீடுகளிலும் விசேட வழிபாடுகள் தைப்பொங்கல் நாளான இன்று இடம் பெற்றன.

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் விசேடமாக பூஜை வழிபாட்டுடன் பொங்கல் இடம் பெறுகிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் குடும்பங்களாக சேர்ந்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக திருகோணமலை நகர் பகுதிகளில் உள்ள திருக்கோணேஸ்வரா ஆலயம்,ஸ்ரீபத்திரகாலி அம்மாள் போன்ற ஆலயங்கள் மற்றும் வீடுகளில்,பொது இடங்களிலும் இத் தைப்பொங்கல் நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு – செட்டிபாளையம்

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று (15.01.2026) பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

கல்முனை

தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா முதன் முறையாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை(15) பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.

பொலிஸ் நிலைய இந்து உத்தியோகத்தர் மற்றும் ஏனைய சமயங்களைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் பங்குகொண்டிருந்த இந்த நிகழ்வு கல்முனை ரோயல் விளையாட்டு கழக அணுசரனையுடன் நடைபெற்றதுடன் தைப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பொலிஸ் உயரதிகாரிகள் கல்முனை ரோயல் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றதுடன் விசேட பூஜை வழிபாடுகளில் பொலிசார் உட்பட பொது மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றும் தமிழ்இமுஸ்லிம்இசிங்கள உத்தியோகத்தர்களிடையெ பரஸ்பரம்இசகோதரத்துவம்இநல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் தொனிபொருளில் இந்த தைப்பொங்கல் விழா இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்இமற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமிஇ சூரியன்இ உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல்படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.ஆண்டுதோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *