முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க காலமானார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக்க காலமானார்
Published January 18, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக்க காலமானார். நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
மறையும் போது அவருக்கு வயது 63 ஆகும். ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) ஆரம்பகால உறுப்பினரான இவர், அந்தப் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான அவர், தற்காலிக தபால், தொலைத்தொடர்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.