யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம் பதிவு
விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ். வலிகாமம் தெற்கு
Published January 19, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் பிரதேச சபையில் வைத்து சுன்னாகம் பொலிஸாரால் குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் கந்தரோடை விகாரை மற்றும் கதுருகொட விகாரை என நாட்டப்பட்ட நான்கு பெயர்ப் பலகைகள் கடந்த 8ம் திகதி பிரதேச சபையால் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.