Featured Breaking

பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்டோருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையினை நிறுவியதன் மூலம் கடற்கரைப்

Published January 19, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலையினை நிறுவியதன் மூலம் கடற்கரைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த துறவிகள் மற்றும் ஏனைய 5 நபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையில், உரிய அனுமதியின்றி கடற்கரைப் பாதுகாப்பு சட்டத்தை மீறி புத்தர் சிலையை நிறுவியமை பலங்கொட காசியப்ப தேரர் உள்ளிட்ட 4 துறவிகளும், அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்ட 5 பொதுமக்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இந்தச் சிலையை அகற்ற அதிகாரிகள் முயன்றபோது ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. விளக்கமறியலில் உள்ள காசியப்ப தேரர் அண்மையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers Breaking and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *