திட்டமிட்ட குற்றவாளியான குடு சித்திக்கின் உதவியாளர் கைது
வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘டுபாய்
வெளிநாட்டில் வசிக்கும் திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘டுபாய் வருண’ மற்றும் முகமது சித்திக் (குடு சித்திக்) ஆகியோரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் தொகுதியுடன் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிறையிலிருக்கும் கருணாநாயக்க பத்திரணலாகே திலிந்து சஞ்சீவ எனப்படும் ‘லேனா’ என்பவரின் உதவியாளராகவும் இவர் செயற்பட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகொல்லவத்தை, அரலிய சந்தியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் வீதியில் வைத்து இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.