மௌண்ட் அசோ எரிமலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஹெலிகொப்டர் மாயம்

ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள மௌண்ட் அசோ எரிமலைப் பகுதியில் ...

Published January 21, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள மௌண்ட் அசோ எரிமலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று  காணாமல் போயுள்ளது.

நேற்று காலை 10:52 மணியளவில் அசோ கடலி டொமினியன் உயிரியல் பூங்காவிலிருந்து 10 நிமிடச் சுற்றுப்பயணத்திற்காக இந்த ஹெலிகொப்டர்  புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில், மௌண்ட் அசோவின் ஐந்து சிகரங்களில் ஒன்றான நகடேக் எரிமலைப் பள்ளத்தின் வடக்குப் பகுதியில் சிதைந்த நிலையில் ஹெலிகொப்டர் பாகம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் வரிசை எண்ணை Serial Number வைத்து அது காணாமல் போன ஹெலிகொப்டர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எரிமலைப் பள்ளத்திலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் அப்பகுதியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக மீட்புக் குழுவினரால் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை. இன்றையதினம் காலை மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *