சட்டவிரோத தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது
ரிதீமாலியத்த, பெதன்கஹஆராவ பகுதியில் தொல்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் ...
Published January 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ரிதீமாலியத்த, பெதன்கஹஆராவ பகுதியில் தொல்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட 07 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிதீமாலியத்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 முதல் 66 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹங்குரன்கெத்த, ரிதீமாலியத்த, கந்தளாய் மற்றும் ரக்வான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.