ஆகக் குறைந்த வெப்பநிலை இன்றும் நுவரெலியாவில்

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை

Published January 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இன்று (23) அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலையாக 5.0 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை அவதானிப்பு நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்று அதிகாலை பண்டாரவளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12.5 பாகை செல்சியஸும், பதுளை பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.8 பாகை செல்சியஸும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மஹாஇலுப்பள்ளம பகுதியில் இன்று அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 பாகை செல்சியஸ் ஆகும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதேச தரவு சேகரிப்பு மையங்களிலிருந்து பெறப்பட்ட குறைந்தபட்ச வெப்பநிலை பெறுமானங்கள், வரைபடம் ஒன்றின் ஊடாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *