எம்பிலிப்பிட்டியவில் ஒருவர் கொலை!
எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர்
Published January 24, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக மூன்று நபர்களால் இந்த கொலைச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.