ஆசனப்பட்டி அணியாவிட்டால் அபராதம் – இன்று முதல் நடவடிக்கை!
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள்
Published January 26, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால் இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான 3 மாத கால அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும் மேற்படி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சாரதிகள் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.