கொரோனா வைரஸால் ‘A’ வகை ரத்தம் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக சீனா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘O’ வகை இரத்தம் கொண்டவர்கள் கொரோனா வைரஸை எதிர்க்கும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது.
சீன ஆய்வாளர்கள் வுஹானில் உள்ள 2 மருத்துவமனைகளிலும், ஷென்சென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் ஆய்வை நடத்தினர்.
இரத்த வகைகளை வைத்து SARS-CoV-2 பரிசோதனையைப் பயன்படுத்தி 2,173 நோயாளிகளின் இரத்த வகைகளை வைத்து 3,694 இற்கும் மேற்பட்ட ஆரோக்கியமான மக்களுடன் கொரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டு ஒப்பிடப்பட்டது.
ஆய்வின்படி, வுஹான் ஜின்யின்டன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட 1,775 நோயாளிகளில், 37.75 % பேர் ‘A’ வகை இரத்த வகைகளையும், 9.10 % பேர் ‘O’ வகை இரத்த வகையையும் கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் ‘A’ வகை இரத்தம் கொண்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ‘O’ வகை இரத்தம் கொண்டவர்கள் குறைந்த அளவிலே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையில் வைரஸால் இறந்த 206 பேரில் 41.26% பேர் ‘A’ வகை இரத்தம் கொண்டுள்ளதாகவும், 25% சதவீதம் பேர் ‘O’ வகை இரத்த கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்காக, ‘A’ வகை இரத்தம் கொண்டவர்கள் பீதி அடையத் தேவையில்லை எனவும், ‘O’ வகை இரத்தம் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாக அர்த்தமில்லை என்றும் தியான்ஜின் ஆராய்ச்சியாளர் காவ் யிங்டாய் கூறியுள்ளார்.
அனைவரும் அரச அதிகாரிகள் கூறியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுகொண்டுள்ளார்.