இந்த ஆண்டு 310,000 வெளிநாட்டு தொழில் இலக்கு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக 2026ம் ஆண்டில் வெளிநாட்டு

Published January 27, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக 2026ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கென 310,000 இலங்கையர்களை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அவர்களில் அதிகமானோர் குவைத் இராச்சியத்தில் வேலைக்கென விண்ணப்பித்துள்ளனர். குறித்த எண்ணிக்கை 777,500 ஆக பதிவாகியுள்ளது.

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்திற்கு 635000 பேர் வேலைக்கென பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை இரு தரப்பு ஒப்பந்தத்திற்கமைய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் 2026ஆம் ஆண்டில் இஸ்ரேலிற்கு 15000 பேரும் 12500 பேர் ஜப்பானிற்கும், தென் கொரியாவிற்கு 6000 பேரும் வேலைக்கென செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *