சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

Published January 28, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாமல், அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan), சஞ்சய பாந்த் (Sanjaya Panth) உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *