சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (புஆழுயு)இ அரசாங்க தாதிகள் சங்கம், பொது சுகாதார

Published January 30, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அரசாங்க தாதிகள் சங்கம், பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் ஏனைய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (29) GMOA தலைமையகத்தில் நடைபெற்றது.

தேசிய சுகாதார சேவையை தற்போது பாதித்துள்ள பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சரின் ஆக்கபூர்வமான தலையீட்டிற்காக GMOA வழங்கிய 48 மணிநேர கால அவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் சாதகமான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என GMOA எச்சரித்துள்ளது.

ஏனைய தொழிற்சங்கங்களுடன் நேற்று நடத்தப்பட்ட கூட்டுப் பேச்சானது, சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளையும் ஒன்றிணைத்த ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல்கள் ஒருபுறம் இடம்பெற்ற போதிலும், மருத்துவ ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக இன்று நாட்டின் பல பகுதிகளில் உள்ள நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன், வழமையான மருத்துவச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *