அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கை வருகை
இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில்
இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இத்தொடரில் பங்கேற்காத காரணத்தினால், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) அந்த அணிக்கு பதிலாக அயர்லாந்து கிரிக்கெட் அணி இணைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 25 பேரைக் கொண்ட அயர்லாந்து கிரிக்கெட் குழுவினர், டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

