போதைப்பொருளுடன் சிக்கிய தம்பதி

புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் ......

Published February 2, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 3 min read

புத்தளம் பொலிஸாரின் நச்சுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று புத்தளம் – மெல்லன்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். 

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு, வெளிப்பகுதிகளில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தம்பதியினர் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

இதனடிப்படையில், சுமார் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, போதைப்பொருளைக் கடத்திச் சென்ற போதே குறித்த தம்பதியினர் கைதாகியுள்ளனர். 

வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இந்தத் தம்பதியினர் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *