லுணுகலையில் கஞ்சாவுடன் மாணவர்கள் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் ......

Published February 2, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் லுணுகலை அலகொல்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுகலை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (01) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அலகொல்கமவைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, ஒரு மாணவனிடமிருந்து 1750 மில்லி கிராமும், மற்றொருவரிடமிருந்து 1300 மில்லி கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.

குறித்த மாணவர்களுக்கு கஞ்சாவை விநியோகித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரும் இதன்போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1800 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 4850 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் விசாரணைகளின் பின்னர், நாளை (03) பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *