சமீந்திர ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல்
Published February 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
சர்ச்சைக்குரிய மிக் (MiG) விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய புதல்வரான சமீந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக அவர் பெயரிடப்பட்டதை அடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சந்தேகநபரான சமீந்திர ராஜபக்ச தற்போது அமெரிக்காவில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.