வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி
அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ...........
Published February 2, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
குறித்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், அப்பெண்ணும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வீதியைக் கடந்த பெண் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதிய பெண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் மிகிந்தலை பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.