திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் தள்ளுபடி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும்
Published February 3, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.