நாடெங்கிலும் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச
கல்முனை
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.அன்ஸார் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் பிரதேச செயலாளர் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுதந்திர தின உரையினை மேற்கொண்டார்.
இதில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எஸ்.அமீர் அலி திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்.ஏ.எல்.ஏ.மஜீத் நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.அன்வர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல்.யாஸீன் பாவா உட்பட கிளைத் தலைவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



மன்னார்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தேசிய கொடி ஏற்றப்பட்ட நிலையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அரசாங்க அதிபரினால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் உதவி மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள்இபிரதேச செயலாளர்கள்இபதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மன்னார்இ நானாட்டான்இ முசலிஇ மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய பிரதேச செயலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




யாழ்ப்பாணம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய காலை 07.30 மணிக்கு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்இ இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ் கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.





சாய்ந்தமருது
சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினதும், பைத்துஸ் ஸக்காத்தினதும் மற்றும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் பள்ளிவாசல் முன்றலில் காலை தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், ஜம்மிய்யத்தல் உலமா, வர்த்தக சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொருப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான ஏ.ஜே.டி. சில்வா கலந்து சிறப்பித்தார்.
முபாறக் ஹாஜியாரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர், சாய்த்தமருது ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலர், சாய்ந்தமருது பிரதேச பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாலர்கள், ஆகியவர்களுடன் சாய்ந்தமருத வர்த்தக சங்கத்தின் செயலாளர், பொருளாலார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.




கல்முனை
78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் மரக்கன்றுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடப்பட்டது.
அத்துடன் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு பால் தேநீர் தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டு வீதியில் சென்ற பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



வவுனியா
இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது.
பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் பி.எ.சரத்சந்திரஇ மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன்இ உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்இமதகுருமார் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ் சிங்களம் என இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு சுதந்திரந்திர தினம் எளிமையாக இடம்பெற்றது.




திருகோணமலை
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
கொட்டும் மழையிலும் 78 ஆவது தேசிய சுதந்திர தேசியக்கொடி பிரதேச செயலாளரால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் 2 நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” (Let us build Sri Lanka) எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து முள்ளிப்பொத்தானை தி/கிண்/ஹிஜ்ரா கனிஷ்ட பாடசாலையிலும் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம் பெற்றது இதில் பிரதம அதிதியாக தம்பலகாமம் பிரதேச செயலாளரும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபருமான (காணி) ஜெ.ஸ்ரீபதி கலந்து சிறப்பித்தார். இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,பெற்றார்கள்என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் சுதந்திர தின கலை கலாசார நிகழ்வுகளுடன் மர நடுகையும் இடம் பெற்றது.



திருகோணமலை
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது இன்று (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்த முப்படை வீரர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
“இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றஇ இந்த நிகழ்வில்இ இலங்கையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பல்லின கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. கலை கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




கிளிநொச்சி
கிளிநொச்சியில் 78வது சுதந்திர தின நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது. வடமாகாண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தமிழ்இ சிங்களஇ ஸ்லாமிய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகளால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன நல்லிணக்கம்இ சமாதானத்தினை வெளிப்படுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
தொடர்ந்துஇ மங்கள விளக்கேற்றப்பட்டதுடன்இ கலை நிகழ்வுகளும் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ்இ சிங்களஇ இஸ்லாமிய மக்கள்இ சர்வமதத் தலைவர்கள்இ அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கலர் மீ எனும் தலைப்பில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



மண்முனைப்பற்று
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் கி.இளம்குமுதன் நிகழ்வுகள் இடம்பென்றன.
இதன்போது உதவி பிரதேச செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீர்த்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கு சுதந்திர தினம் பற்றியும் பொருளாதாரத்தால் வீழ்ச்சி அடைந்த நாட்டை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் பாதையில் பங்குதாரர்களாக விளங்கவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் உதவி பிரதேச செயலாளரினால் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், கணக்காளர் ஏ.மோகனகுமார்;, நிருவாக உத்தியோகத்தர் ஏ.தவேந்திரன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு மர நடுகையும் இடம்பெற்றது.


