மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகஸ்ஹின்ன பகுதியில் நேற்று (05) இருவர் மீது

Published February 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகஸ்ஹின்ன பகுதியில் நேற்று (05) இருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து வீடொன்றின் பாதுகாப்புச் சுவரை நிர்மாணித்துக் கொண்டிருந்த போதே, இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நாகொல்லாகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.