அமெரிக்கா – ஈரான் இன்று உயர்மட்ட பேச்சுவார்தையில்

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர .......

Published February 6, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.

சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன.

இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஓமான் ‍உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த பேச்சுவார்தையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மற்றும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கேற்பார்கள். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவாத்தையில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவும் ஈரானும் ஆரம்பத்தில் துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டன.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உலகம் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *