2025 இல் போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் பெருமளவிலான .....

Published February 7, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 

ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், 2025ஆம் ஆண்டில் இலங்கை பொலிஸாரின் ஒட்டுமொத்த செயற்திறனை 50 வீதத்திலிருந்து 60 வீதம் வரை அதிகரிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார். 

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் ஆயுதச் சோதனைகள் இரண்டு மடங்காகவும், போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மூன்று மடங்காகவும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

இது இலங்கை பொலிஸ் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த மட்டம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், தொடர்ச்சியான கண்காணிப்பு, உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்யும் பணிகளைச் சரியாக மதிப்பீடு செய்தமை காரணமாக பொலிஸ் சேவையின் செயற்திறனை உயர் மட்டத்தில் பேண முடிந்ததாக பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தினார். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *