களுத்துறையில் துப்பாக்கிச் சூடு சம்பவம்
ளுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்......
Published February 8, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்துள்ளது.
களுத்துறை மாநகர சபை வேட்பாளரை இலக்கு வைத்து நேற்று இரவு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், அது குறி தவறியதால் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்தவர் களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பந்துல பிரசன்ன என்பவராவார்.
இவரை இலக்கு வைத்து 9 மாதங்களுக்கு முன்னரும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.