ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழையுடன் கூடிய வானிலை நிலவுமென
Published February 9, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலை நிலவும். சப்ரகமுவஇ மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.