சுழல்பந்தினால் வென்ற இலங்கை அணி

டி-20 உலக கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில்

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

டி-20 உலக கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும்இ கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் மஹீஸ் தீக்ஸன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்மூலம் 2026 இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரை வெற்றியுடன் இலங்கை அணி ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers விளையாட்டு and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *