கஸ்ஸப்ப தேரர் மீண்டும் விளக்கமறியலில்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 1 min read

பலங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மேலும் சில தேரர்கள் எதிர்வரும் 11ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

திருகோணமலையில் புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப்ப உட்பட நான்கு தேரர்களுடனான சந்தேக நபர்கள் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருகோணமலை நகர கரையோர பாதுகாப்பு வலயத்திற்குள் சட்டவிரோத கூடாரமொன்றை அமைத்து அங்கு புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ததாக துறைசார் திணைக்களத்தினால் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய தேரர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *