ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 600 ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், குணார் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் வீதிகள் கட்டட இடிபாடுகளால் சூழப்பட்டிருப்பதால், மீட்புக் குழுவினர் நுழைய முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் வந்து கொண்டிருப்பதாகவும், வீதி வழியாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
