இந்திய உயர்மட்ட குழு இலங்கை வருகை

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு

Published February 9, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் இந்திய தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி பெப்ரவரி 11ஆம் திகதி தெவ்னிமோரி புனித சின்னங்களை இந்தத் தூதுக்குழு இந்தியாவுக்கு கொண்டு செல்லவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் தெவ்னிமோரி புனித சின்னங்கள் பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு, ஹ_னுபிட்டி கங்காராம விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை 24 மணஜ நேரமும் புனித சின்னங்கள் வழிபட பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *