பனை அபிவிருத்தி சபை வேலைத்திட்டங்கள் : பிரதி அமைச்சர் விசேட சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட.......

Published February 10, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பனை மற்றும் பனை சார் கைத்தொழிலினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பனை அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அதிகாரி

களுடன் விசேட சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது 2025 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் வேலை திட்டங்கள் பற்றியும் அடைந்த அபிவிருத்தி தொடர்பாகவும் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பவானந்த ராஜா மற்றும் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, வட மாகாண கூட்டுறவு ஊழியர் ஆனைக் குழுவின் தலைவர் பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் பனை உற்பத்தியாளர்கள்,  பனை உற்பத்தி சார் ஏற்றுமதியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்,  மது வரி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர். 

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *