LATEST
விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!விவசாயிகளை புறக்கணிக்கிறாரா அமைச்சர்? தேசிய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு!ரூ.2 கோடி நிதி மோசடி வழக்கு… 5 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை!நீதிபதிகளின் ஓய்வு வயது கட்டாயம் நீட்டிக்கப்படும் – பிரதி அமைச்சர்!நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு நீதித்துறை சேவைச் சங்கம் கடும் எதிர்ப்பு!உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5%க்கும் மேல் சரிவு!இடி, மின்னல், பலத்த காற்று! வெளியான அவசர வானிலை எச்சரிக்கைஅரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் அங்கீகாரம் வேண்டும்!சஜித்துக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு!
விளையாட்டு

இந்தியா–பாகிஸ்தான் போட்டிக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடு

February 10, 2026 · Tamil Ceylon LK

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

இப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசாங்கம் முன்னர் எடுத்திருந்த முடிவை, இலங்கையின் தலையீட்டின் பின்னர் மாற்றிக்கொண்டமை குறித்து அரசாங்கம் என்ற வகையில் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, நாடுகளுக்கிடையில் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புவதற்கு ஒரு நாடாக இலங்கைக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமாயின், அரசாங்கம் என்ற வகையில் அந்தத் தலையீட்டைத் தயங்காமல் நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Related Stories

மேலும் ›