இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – இன்றும் மூவர் உயிரிழப்பு!

0

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.

மொறட்டுவை பிரதேசத்தை சேர்ந்த 84 வயது பெண் ஒருவர், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் மற்றும் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 75 வயது ஆண் ஒருவர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே இவ்வாறு இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.