தோட்டத் தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை நானுஓயா.......
Published February 11, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று காலை நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், “எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்” எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
