‘Dawson’s Creek’ நாடக புகழ் James Van மரணம்
90களில் வெளியான ‘Dawson’s Creek’ நாடகத் தொடரின் புகழ்ப்பெற்ற நடிகரான James Van Der
90களில் வெளியான ‘Dawson’s Creek’ நாடகத் தொடரின் புகழ்ப்பெற்ற நடிகரான James Van Der Beek தனது 48வயது வயதில் உயிரிழந்துள்ளார். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இறப்பதற்கு முன்னைய நாளிலும் தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பெருங்குடல் புற்றுநோய் தாக்கத்தின் 3ம் கட்டத்தில் உள்ளதாக ஜேம்ஸ் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதேவேளை புற்றுநோய்க்கான சிகிச்சைகள் காரணமாக ஜேம்ஸின் குடும்பம் பாரிய நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.
அவரது குடும்பத்திற்கு நிதி சார் உதவிகளை கோரி ஜேம்ஸின் மனைவி கிம்பர்லி பிரச்சார நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 பிள்ளைகளின் தந்தையான ஜேம்ஸின் மறைவிற்கு ஹொலிவூட் பிரபலங்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.