மாவீரர் தின நிகழ்வுகளை வழமைபோன்று முன்னெடுப்போம் – எம்.கே.சிவாஜிலிங்கம்

0

மக்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று கூடி மாவீரர் தின நிகழ்வுகளை வழமைபோன்று முன்னெடுப்போம் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் 27 மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு தாம் யாரிடமும் அனுமதிபெற தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதனை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் மக்கள் தமது குடும்ப உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு யாரிடமும் அனுமதியும் பெறதேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நினைவேந்தலை நடாத்தும் போது தம்மை கைது செய்தால் செய்யட்டும் என தெரிவித்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், எவ்வாறான தடைவரினும் மாவீரர் தின நிகழ்வை நடாத்துவோம் என உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.