சி.ஐ.டி யில் முன்னிலையாக வேண்டாம்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன்...
Published September 1, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை என அவ் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் தொடர்பான விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக சமன் ஏக்கநாயக்க இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.