அதிர்ச்சி சம்பவம் – மனைவியை தீ வைத்து கொன்ற கணவன்
குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை......
Published February 14, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
குடும்பத் தகராறு முற்றியதில் ஏற்பட்ட சம்பவமொன்றில், கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்.
பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று இந்த கொடூரக் குற்றம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பரசன்கஸ்வெவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் இந்தக் கொலையைச் செய்துள்ளமை அதில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.