“ஈழ தேசத்தின் பாசக்குரல் சிறீதரன்” நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவஜானம்

Published February 15, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிவஜானம் சிறீதரன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நேற்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பொது அமைப்புகள் ஏற்பாடு செய்த கருத்தாடல் நடைபெற்றது.

“ஈழ தேசத்தின் பாசக்குரல் சிறீதரன்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி தலைமை காரியாலயத்திற்கு சென்ற அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடி, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *