மாதம்பிட்டிய தொடர்மாடி பணிகள் முன்னேற்றம் : அமைச்சர் விஜயம்
மாதம்பிட்டிய எப்பல்வத்த பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி.........
Published February 20, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மாதம்பிட்டிய எப்பல்வத்த பகுதியில் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை துறைசார் அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று பார்வையிட்டார். குறித்த வீட்டுத் தொகுதியில் 2100 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குறித்த திட்டத்திற்கான நிதியுதவியை வழங்குகின்றது. கண்காணிப்பு விஜயத்தில் பிரதியமைச்சர் எரங்கு குணசேகரவும் பங்கேற்றிருந்தார்.
நகர புனரமைப்பு திட்ட முயற்சிகளின் ஊடாக மேம்படுத்தப்பட்ட வீட்டு வசதிகளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுப்பதே இதன் இலக்காகும்.