பண்டிகை காலத்தினை முன்னிட்டு இலங்கையில் பயணத்தடை?

0

நத்தார் மற்றும் புதுவருட புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், பயணத்தடையை நீடிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மிகவேகமாக அதிகரித்துள்ளமையால், இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்குமு் பயணத்தடையை பண்டிகை காலத்தில் கடுமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

‘எவ்வாறாயினும், மக்கள் தாமாகவே பயணங்களை கட்டுப்படுத்திக்கொள்வது சிறந்தது, பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் அதிகளவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர்’ என்றார்.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவலை வெகு விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார் என்றும் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.