மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 6 யானைகள் இன்று(20) மாலை 7 மணியளவில்

Published February 21, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 6 யானைகள் இன்று(20) மாலை 7 மணியளவில் திருப்பெருந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது.

3 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை எனவும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையும் தோல்வியடைந்துள்ளது.

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களமும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறித்த யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

ஐந்துக்கு மேற்பட்ட யானைகள் அருகில் உள்ள விமான நிலையத்திக்குள் புகுந்துள்ளது திரும்பவும் சிறிது நேரம் கழித்து மீண்டும் வருவது வழமை இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடன் கழித்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *