லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை !
நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு...
Published September 2, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட், செவ்வாய்க்கிழமை (02) அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690 ஆகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும் இருக்கும்.
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் மாறாமல் உள்ளது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.