வீடு புகுந்து கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது
மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.........
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மீகொடை பகுதியில் வீடொன்றை உடைத்து 25 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடிய நபர் ஒருவரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மீகொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீகொடை, புவக்வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீகொடை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.