விசேட சுற்றிவளைப்பில் 640 பேர் கைது
நாடு முழுவதும் நேற்றைய தினம் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
நாடு முழுவதும் நேற்றைய தினம் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் ஊடாக 640 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது 27,567 பேர் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 26 ஆகும். பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 369 பேர் கைதாகினர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 308 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 77 பேரும் கைது செய்யப்பட்டனர். ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்காக 4,153 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.