மீனகயா ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்
மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு
Published February 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வரை ரயில் சேவை இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ரயில் இன்று காலை 7 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
திட்வா புயல் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனகயா ரயில் சேவை புனரமைப்பு பணிகளின் பின்னர் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.