அயோத்தி சிவன்கோவிலின் தலைமை பூசாரி இலங்கை வருகை

அயோத்தி சிவன்கோவிலின் தலைமை பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான 14

Published February 23, 2026 Updated March 29, 2026 By Tamil Ceylon Desk 2 min read

அயோத்தி சிவன்கோவிலின் தலைமை பூசாரி கைஷானந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர், 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை 09:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-192) விமானம் மூலம் வருகை தந்த இவர்களை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவவசம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் “கோல்ட் ரூட்” முனையத்தில் வரவேற்றனர்.

இந்தக் குழுவினர் இலங்கையில் உள்ள பின்வரும் புகழ்பெற்ற சிவன் கோவில்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களுக்குச் செல்லவுள்ளனர்:

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம்

யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம் ஆலயம்

திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம்

நுவரெலியா சீதா அம்மன் கோவில்

பொலன்னறுவை சிவன்கோவில் சிதைவுகள் மற்றும் பண்டைய பகுதிகள்

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு விவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுடனான விசேட சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

Tamil Ceylon Desk
News Desk Tamil Ceylon Desk

Tamil Ceylon Desk covers உள்ளூர் and the day's developing stories for Tamil readers in Sri Lanka and around the world.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *