கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பிள்ளையானுக்கு வரவேற்பு – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

0

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சுகாதார நடைமுறைகளை மீறி வரவேற்பு நிகழ்வொன்றை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடியுள்ள பின்னணியில், பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இவ்வாறு பயன்படுத்துவது சரியானதா எனவும் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சனிக்கிழமை விடுமுறை நாளன்று மாணவர்களை இவ்வாறு அழைத்து, வரவேற்பை நடத்தியமை தவறானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.